சீன ,பாக் எல்லையில் ஒருங்கிணைந்த தாக்கும் குழு-எதிர்கால திட்டம்

சீன ,பாக்  எல்லையில் ஒருங்கிணைந்த தாக்கும் குழு-எதிர்கால திட்டம்

இராணுவத்தின் மாறுதல்களின் ஒரு பகுதியாக அதிசக்தி படைத்த ஒருங்கிணைந்த தாக்கும் குழு அமைக்கப்பட்டு அவை சீன மற்றும் பாக் எல்லையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

முதல்  Integrated Battle Group (IBG) எனப்படும் தாக்கும் குழு இராணுவத்தின் 9 கார்ப்சின் கீழ் வர உள்ளது.இராணுவத்தின் மேற்கு கட்டளையகத்தின் கீழ் வர உள்ள இந்த குழு தன் செயல்பாடுகளை அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தொடங்கும்.

இராணுவத்தை முழுமையாக தாக்கும் குழு மூலம் மாற்றி எதிர்கால தாக்கும் குழுவாக மாற்ற நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

இது தவிர கிழக்கு பகுதியில் இந்த குழுவை நிலைநிறுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.அதன் முன் பயிற்சியாக ஒரு குழு தொடங்கப்பட்டு அருணாச்சலில் பயிற்சி மேற்கொள்ளப்படும்.தரைப் பகுதி தவிர மலைப்பகுதியில் குழுவின் திறன் பரிசோதிக்கப்படும்…ஒருங்கிணைப்பு தான் இதில் முக்கியமான ஒன்று.

எதிரியின் எவ்வித படைப்பிரிவையும் எதிர்கொள்ளுமளவுக்கு நமது குழு சக்தி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் புதிதாக உருவாக்கப்படும் குழு ஏற்கனவே உள்ள பணிகளில் இடையூறு ஏற்படாமல் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.