ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்.
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்போவதாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தவர் ஹம்சா பின்லேடன். இவர், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனின் மகன் ஆவார். 2011 ஆம் ஆண்டு பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றதற்கு பின்னர் அல்கொய்தா அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார் ஹம்சா. இதனையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஹம்சா பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது.
மேலும், ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்தநிலையில், ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உறுதி செய்துள்ளார்.