விக்ரம் லேண்டரின் 14 நாள் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைவதால் அதன் தொடர்பு நிரந்தரமான முடிவுக்கு வந்துவிடுகிறது.
நிலவை ஆராய்வதற்காக கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக அனுப்பிய விக்ரம் லேண்டர் சந்திரயானிலிருந்து பிரிந்து நிலவுக்கு அருகே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது.
விக்ரமிடமிருந்து சிக்னலை மீட்க இஸ்ரோ மேற்கொண்ட விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. விக்ரமை படம் எடுத்து அனுப்பிய நாசாவின் ஆர்பிட்டரும் தெளிவான படங்களை அனுப்பவில்லை. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டதன் காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
Polimer