வெள்ளை கொடி வீரர்களான பாக் வீரர்கள்

வெள்ளை கொடி வீரர்களான பாக் வீரர்கள்

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இரண்டு பேரை இந்திய ராணுவம் சுட்டு கொன்றது. அவர்களின் உடலை பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளை கொடியுடன் வந்து, எடுத்து சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாக்., ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி வந்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.

கடந்த செப்., 10 மற்றும் 11 தேதிகளில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹஜிபுர் பகுதியில் பாகிஸ்தான் வீரர் குலாம் ரசூல் சுட்டு கொல்லப்பட்டார். இவர், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பகவல் நகரை சேர்ந்தவர் ஆவார். இந்திய நிலைகள் மீது கடுமையாக துப்பாக்கிச்சூடு நடத்தி, வீரரின் உடலை மீட்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. அப்போது மற்றுமொரு பாகிஸ்தான் வீரர் சுட்டு கொல்லப்பட்டார்.

இருப்பினும், அடுத்த இரண்டு நாட்களாக, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியும், இறந்த வீரர்களின் உடலை மீட்க முடியவில்லை. இதனையடுத்து, வெள்ளைக்கொடி ஏந்தி வந்து, தனது வீரர்களை கொண்டு சென்றது. பாகிஸ்தான் ராணுவம் வெள்ளைக்கொடி ஏந்தியதும், அதனை மதித்து உடலை எடுத்து செல்ல இந்திய ராணுவம் அனுமதி வழங்கியது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வெள்ளைக்கொடி ஏந்துவது என்பது சரண் அடைய தயார் என்பது அல்லது சமாதானத்திற்கு தயார் என காட்டுவதை குறிக்கும். இதன் மூலம், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது நிரூபணமாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஜூலை 30 – 31ல் கெரான் செக்டார் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 7 வீரர்களை இந்திய ராணுவம் சுட்டு கொன்றது. அவர்கள், பாகிஸ்தானின் பஞ்சாபை சேர்ந்தவர்கள். ஆனால், அவர்களின் உடலை மீட்க பாகிஸ்தான் ராணுவம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. கார்கில் போரின் போதும் கூட, கொல்லப்பட்ட தனது வீரர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் எந்த மரியாதையும் அளிக்கவில்லை. ஆனால், இந்திய ராணுவம், தனது வீரர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து அடக்கம் செய்தது

காஷ்மீரிகளையும், தன் காலாட்படையையும் பீரங்கி குண்டுகளாக பாகிஸ்தான் ராணுவம் கருதுகிறது. ராணுவம், அரசியல், சமூக அமைப்புகள் மற்றும் தேசிய வளங்களில் பஞ்சாபை சேர்ந்த முஸ்லிம்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தில், பஞ்சாபி முஸ்லிம் ஜெனரல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ராணுவத்தில் உள்ள 70 சதவீத வீரர்கள் இந்த பகுதியை சேர்ந்தவர்கள். மோதலின் போது கொல்லப்படும், இந்த பகுதியை சேர்ந்த வீரர்களை மீட்க, பாகிஸ்தான் ராணுவம், தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published.