முதல் ரபேல் போர் விமானம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைத்தது பிரான்ஸ்

ரபேல் விமானங்களைத் தயாரிக்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து முதல் ரபேல் விமானத்தைப் பெற்றுக் கொண்ட  விமானப்படையின் துணை ஏர்மார்ஷல் வி.ஆர்.சவுத்திரி சுமார் ஒருமணி நேரம் ரபேல் விமானத்தை ஓட்டிப் பார்த்தார்.
ரபேல் விமானத்தில் ஆர்பி என்ற பெயரும் 01 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்க உள்ள ராகேஷ் குமார் சிங் பகதூரியாவின் பெயர் சுருக்கமே ஆர்.பி ஆகும்.வரும் 30ம் தேதி முதல் இவர் விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
ரபேல் விமானம் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட நிகழ்வையடுத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கை ராகேஷ்குமார் சிங் பகதூரியா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.