மேஜர் ஹர்பஜன் சிங்

மேஜர் ஹர்பஜன் சிங்
1962க்கு பிறகு இந்தியாவும் சீனாவும் மற்றும் ஒரு முறை நேரடியாக மோதின.ஆனால் பெரிய அளவு பரந்து விரிந்த போராக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சண்டை நடந்தது.நாதுலா என்ற இடத்தில் நடைபெற் அந்த சண்டை தற்போது Barbwire Incident என அழைக்கப்படுகிறது.
அங்கு தான் மேஜர் ஹர்பஜன் சிங் மற்றும் 18வது இராஜ்புத்  ( தற்போது 13வது மெக் ) மற்றும் 2 வது கிரேனாடியர்ஸ் பிரிவைச் சேர்ந்த 66 வீரர்கள் சீனாவை போரிட்டு வீரமரணம் அடைந்தனர்.
செப்டம்பர் 11,1967 மணி 5.40.மேஜர் ஹர்பஜன் சிங் அவர்களும் அவரது வீரர்களும் இராணுவ பொறியியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.இராணுவ என்ஜினியர்கள் நாதுலா பகுதியின் வடக்கு பகுதியில் வேலித்தடுப்பு போட்டுகொண்டிருந்தனர். வேலி போடும் போதே அங்கு வந்த சீன வீரர்கள் வேலி அமைக்கும் பணியை கைவிட மிரட்டினர்.
ஆனால் இந்திய கட்டளை அதிகாரி எங்களுக்கு ஆர்டர் மிகத் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது.பணியை நிறுத்த முடியாது என கூறிவிட்டார்.இந்த பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறியது.அந்த சிறிய சீன கமிசார் அதிகாரி முரட்டு தனமாக மாறினார்.
இந்த நேரத்தில் சீனத் துருப்புக்கள் தங்களது பங்கருக்கு திரும்பி சென்றனர்.ஆனால் அவர்கள் விடுவதாய் இல்லை.
சில நேரத்திலேயே ஒரு நடுத்தர ரக இயந்திர துப்பாக்கியை கொண்டு நமது வீரர்களை தாக்க தொடங்கினர்.நிலைமையை புரிந்து கொண்ட மேஜர் ஹர்பஜன் சிங்  “Akhaura Tigers” என கத்திக்கொண்டே எதிரிகளை தன் துருப்புகளுடன் தாக்க தொடங்கினார்.
துப்பாக்கி முனை கத்தியால் மூன்று சீன வீரர்களை வீழ்த்திய பிறகு ஒரு கிரேனேடை எடுத்து வீசி அந்த நடுத்தர ரக இயந்திர துப்பாக்கி பங்கரை தகர்த்தார்.
கிட்டத்தட்ட இதே நேரத்தில் மேஜரும் காயமடைந்து பின் வீரமரணம் அடைந்தார்.ஆனால் அவர் அந்த இயந்திர துப்பாக்கியை அழித்ததன் மூலம் பல வீரர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்க இந்திய இராணுவம் தனது  Artillery Observation Posts (AOP) நிலையில் இருந்து சீன பங்கர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.அந்தப் பகுதியில் இருந்த பல சீன பங்கர்கள் அழிக்கப்பட கிட்டத்தட்ட 400 சீன வீரர்கள் வீழ்த்தப்பட்டனர்.
கிரேனாடியர்களும் இராஜ்புத்திரர்களும் மிக அருகே நின்று சீனர்களுடன் போர் நடத்தினர்.
அடுத்த மூன்று நாட்களுக்கு சீனர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது.
அவரது வீரதீரம் காரணமாக அவருக்கு மகாவீர் சக்ரா வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.