அரபிக் கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான்

அரபிக் கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான்

பாகிஸ்தானின் கடல்வழித் தாக்குதல் திட்டத்தை முறியடிக்க இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் முன்னகர்த்தியுள்ளது.

கடற்படையின் போர்விமானங்கள், தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அரபிக் கடலில் பாகிஸ்தான் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை தனது கடற்படை பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் எந்த விதமான வரம்புமீறலில் ஈடுபட்டாலும் அதனை எதிர்கொள்ள படைகளை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது. பாகிஸ்தானின் கடல் பயிற்சிகள் வழக்கமானவைதான் என்ற போதும் எந்த நேரத்திலும் அதன் உள்நோக்கம் மாறலாம் என்பதால் தயார் நிலையில் இருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடல்வழியாக பாகிஸ்தான் தாக்கினாலும் தீவிரவாதிகளை ஏவினாலும் அதனை முறியடிக்க மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.