இந்தியாவுடனான போரில் பாக் தோல்வியடையலாம்; ஆனால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்- பாக் பிரதமர் இம்ரான்

இந்தியாவுடனான போரில் பாக் தோல்வியடையலாம்; ஆனால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்- பாக் பிரதமர் இம்ரான்

பாக் பிரதமர் இம்ரான் மீண்டும் ஒருமுறை போர் குறித்து பேசியுள்ளார்.இம்முறை அணுஆயுதப் போர் குறித்தும் பேசியுள்ளார்.ஆர்டிக்கிள் 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் இந்தியாவுன் முழுமையாக இணைந்ததை சட்டவிரோத இணைப்பு என பாக் கூறி வருகிறது.

அல் ஜசிரா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்தியாவுடனான கன்வென்சனல் போரில் பாக் தோற்றுப் போகலாம் ஆனால் விளைவுகள் இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில் ” பாக் எப்போதும் அணு ஆயுதப் போரை தொடங்காது.நான் பசிபிஸ்ட்.போருக்கு எதிரானவன்” என கூறியுள்ளார்.போர் பிரச்சனைகளை தீர்க்காது எனவும் கூறியுள்ளார்.

மேலும் இரு அணுஆயுத நாடுகள் அணுஆயுதப் பிரயோகம் இல்லாமல் போர் புரிந்தாலும் அது இறுதியாக அணுஆயுதப் போரில் தான் முடியும்.அப்படி கன்வென்சனல் போர் வந்து நாங்கள் தோற்றுக்கொண்டிருந்தாலும் ஒன்று சரணடைய வேண்டும் அல்லது சாகும் வரை போரிட வேண்டும்.பாகிஸ்தான் சுதந்திரத்திற்காக சாகும் வரை போரிடும் என கூறியுள்ளார்.அப்படி ஒரு அணுசக்தி உடைய நாடு சாகும் வரை போரிட்டால் அடுத்த விளைவுகள் கடுமையாக இருக்கும் என கூறியுள்ளார்.

 இம்ரான் கான் பேசுவதை குறிப்பிட்டு பார்த்தோமேயானால் மறைமுகமாக அணுஆயுதப் போர் குறித்து எச்சரிக்கை விடுக்கிறார் என்பது புரியும்.

Leave a Reply

Your email address will not be published.