- லெப்டினன்ட் கலோனல் கௌரவ் சோலாங்கி உடலுக்கு வீரவணக்கம்
உள்நாட்டு சண்டை, அரசியல் நெருக்கடியில் தவிக்கும் காங்கோவில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அங்கு பணியாற்றி வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
அந்த வகையில், காங்கோவில் ஐநா அமைதிப்படையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி கவுரவ் சோலங்கி, கிபு ஏரியில் படகு ஓட்டிச் சென்றபோது கடந்த சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை, அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அவரது உடல் ஏரியில் இருந்து மீட்கப்பட்டதாக ஐநா செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது உடலுக்கு நேற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்திய இராணுவத்தின் 12வது பாரா படையைச் சேர்ந்த வீரர் ஆவார்.அவர் இந்தியா திரும்பும் போது 12வது பட்டாலியனின் கமாண்டராக பதவியேற்க இருந்த நிலையில் இந்த துர்ததிர்ஷ்டமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.