எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் மோதல்

லடாக் எல்லை பகுதியில், இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

லடாக்கில் உள்ள பன்கோங் வடக்கு கரை அருகில் இருக்கும் பல பகுதிகள் இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றனர்.பன்கோங் ஏரி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சீன ராணுவத்தினர், இது சீன பகுதி என்றும் இங்கிருந்து வெளியேறும்படியும் கூறி மோதல் போக்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அது, இந்திய பகுதி தான் எனக்கூறி இந்திய ராணுவத்தினர் வெளியேற மறுத்தனர். இதனால் மோதல் போக்கு நீடித்தது.

பின்னர், பிரிகேடியர் தர அதிகாரிகள் தலைமையிலான பிரதிநிதிகள் அடங்கிய குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனால் இருதரப்பினரின் மோதல் போக்கு தீர்க்கப்பட்டது.
எல்லைக்கட்டுபாடு குறித்த மாறுபட்ட கருத்துகள் காரணமாக இதுபோன்ற மோதல்கள் அடிக்கடி நிகழுவதாகவும், இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படுவதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.

அடுத்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இந்த மோதல் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.