சியாச்சின் கிளாசியரை பொதுமக்களுக்காக திறந்துவிட திட்டம்

சியாச்சின் கிளாசியரை பொதுமக்களுக்காக திறந்துவிட திட்டம்

 உலகின் மிக உயரமான போர்க்களம் என வருணிக்கப்படும் சியாச்சின் கிளாசியரை பொதுமக்களுக்காக திறந்து விட உள்ளது இராணுவம்

 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மிரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.மூத்த அதிகரிகளுடனான சந்திப்பின் போது இந்த தகவலை இராணுவ தளபதி  Army chief General Bipin Rawat தெரிவித்திருந்தார்.

தேச ஒருங்கிணைப்பிற்கு இது உதவியாக அமையும் என்ற தகவலையும் தளபதி கூறியிருந்தார்.பயிற்சி மையம் போன்ற இராணுவ இடங்களை பொதுமக்கள் தரிசிக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.தற்போது சியாச்சினில் முன்னனி நிலைகளை பொதுமக்களுக்காக திறக்க உள்ளோம் என கூறியுள்ளார்.

ஆனால் எங்கு எப்போது பொதுமக்களை அனுமதிப்பது குறித்த முடிவுகளை இராணுவம் இன்னும் எடுக்கவில்லை.லடாக்கின் ஒரு பகுதியாக இருக்கும் சியாச்சின் உலகின் மிக உயர்ந்த போர்க்களமாக கருதப்படுகிறது.

ஆயிரக்கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் வருடம் முழுதும் முன்னனி நிலைகளை விழிப்புடன் உயிர்ப்புடன் காத்து வருகின்றனர்.

வருடம் முழுதும் வென்பனியால் சூழப்பட்டுள்ள இந்த இடத்தின் காலநிலை எதிரியின் குண்டுகளை விட மோசமானது.

இதற்கு பாக் எதிர்ப்பு தெரிவிக்குமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தளபதி மொத்த கிளாசியரும் நம்முடையது.அனுமதிப்பது தொடர்பான முடிவை இந்திய நிர்வாகம் எடுக்கும் என கூறியுள்ளார்.

ஏற்கனவே சியாச்சின் கிளாசியரில் 2007 முதல் ட்ரெக்கிங் அனுமதி வழங்கப்பட்டுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.