காஷ்மீர்: ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதம், வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லாரி சிக்கின.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியிருந்தது. மேலும் காஷ்மீர் எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ சுமார் 280 பயிற்சிபெற்ற பயங்கரவாதிகள் எல்லைப்பகுதியில் தயார் நிலையில் உள்ளதாக உளவுத்துறையும் எச்சரித்திருந்தது. இதனால் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இன்று (செப்., 12) பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.,47 ரகத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கண்காணிப்பை மேலும் பலப்படுத்தியது.

காஷ்மீரின், கத்வா பகுதியில் நடந்த சோதனையில், சந்தேகப்படும் படி வந்த லாரியை பிடித்து சோதனையிட்டனர். சுகில் லட்டோ என்ற உரிமையாளர் பெயரை கொண்ட அந்த லாரியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததால் ஓட்டுநரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். லாரியில் இருந்து ஏகே 56 ரக துப்பாக்கிகள் 4, ஏகே 47 ரக துப்பாக்கிகள் 2, 6 தோட்டாக்கள் ,11 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. லாரியில் வெடிபொருள் கடத்தப்பட்டது தொடர்பாக 3 ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply

Your email address will not be published.