ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ள ஆளில்லா விமானங்கள்

ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ள ஆளில்லா விமானங்கள்

ஒரு காலத்தில் அதிக ஆபத்தில்லாமல் இருந்த ஆளில்லா விமானங்கள் இன்று அசுர தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஆபத்தான ஆயுதங்களாக மாறியுள்ளன.அதற்கு சான்று தான் சௌதியின் அராம்கோவின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்.பாதி கிடங்குகள் அதில் அழிக்கப்பட்டன.ஆகத் துல்லியமாக நடைபெற்ற இந்த தாக்குதல் வளைகுடா பதற்றத்தை மேலும் அதிகரித்து கிட்டத்தட்ட போர்ச்சூழல் உருவாகியுள்ளது.

18 குறைந்த செலவுடைய ( low-cost drones along with cruise missiles) ஆளில்லா விமானங்கள் யேமனின் ஹௌதி கிளர்ச்சி குழுவால் ஏவப்பட்டு இந்த தாக்குதல் அறங்கேறியது.இதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இந்தியாவின் குறைந்த பட்சம் 25 பைசா என்ற அளவில் தினமும் விலையுயர்வு ஏற்பட்டுள்ளது நாம் அறிந்ததே.

unmanned aerial vehicles (UAV) அல்லது drones எனப்படும் இந்த சாதனங்கள் ஒரு பக்கம் மக்களுக்கு பயன்படும் வகையில்  ( logistics and mapping support) இருந்தாலும் மறு பக்கம் முக்கிய இலக்குகளை தாக்கி அழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.இன்றயை காலத்தில் மிகப் பெரிய அளவில் அதன் வளர்ச்சி உள்ளது.

video-camera techniques, precision operations with improved GPS, stealth operations மற்றும் faster speed என்ற தொழில்நுட்பங்கள் மூலம் அது இராணுவங்களுக்கு பயன்படுகிறது.இந்தியாவும் கூட ஆளில்லா விமான மேம்பாட்டில்  ஈடுபட்டு வந்தாலும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம் தான்.

1990களில் இந்திய இராணுவம் இஸ்ரேலிடம் இருந்து ( Israeli drones for recce and surveillance) ட்ரோன்களை இறக்குமதி செய்தது.கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளுக்காக இந்த விமானங்கள் வாங்கப்பட்டாலும் இவை ஆயுதம் ஏந்தாத வகைகள் ஒன்றை தவிர.

ஹெரோப் என்ற தற்கொலை விமானங்கள் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.மேலும் புதிதாக 50 விமானங்கள் வாங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.