வானூர்தி விபத்தில் இந்திய மற்றும் பூடான் விமானிகள் உயிரிழப்பு
இந்திய இராணுவ வானூர்தி விபத்துக்குள்ளாகியதில் இந்திய மற்றும் பூடானிய விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
யோன்புலா என்னுமிடத்தில் உள்ள கென்டோங்மனி என்ற மலைப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த வானூர்தி இந்திய இராணுவத்தை சேர்ந்தது.யோன்புலா என்னுமிடத்தில் தலையிறங்க முற்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்திய தரப்பில் உயிரிழந்த வீரர் லெப் கலோ தரத்தில் ஆன வீரர் ஆவார்.பூடான் இராணுவ விமானி இந்திய இராணுவத்துடன் பயிற்சி எடுத்தவர் ஆவார்
கடுமையான காலநிலை காரணமாக தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றனர்.