வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் நிருபர்களிடம கூறியதாவது:
குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக நிறைவேற்ற முழுமையாக முயற்சி செய்வோம். இந்த விவகாரத்தில், தூதரக ரீதியாக பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்போம். காஷ்மீரில், மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை. 95 சதவீத டாக்டர்கள் பணியில் உள்ளனர். வங்கிகள் வழக்கம் போல் செயல்படுகின்றன. காஷ்மீரின் 92 சதவீத பகுதிகளில், எந்த கட்டுப்பாடும் இல்லை.
ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து, நமது குழுவினர், இந்தியாவின் நிலையை தெளிவாக விளக்கி கூறினர். பாகிஸ்தானின் பொய் மற்றும் தவறான பிரசாரத்திற்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானில், பயங்கரவாத கட்டமைப்பில், அந்நாட்டின் பங்கு குறித்து சர்வதேச சமூகம் தெளிவாக அறிந்து வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.