தென் ஆசியா நாடுகள் தேஜஸ் விமானம் வாங்க விருப்பம்; இந்தியாவும் ஏற்றுமதி செய்ய தயார்- இராணுவ அமைச்சர்

தென் ஆசியா நாடுகள் தேஜஸ் விமானம் வாங்க விருப்பம்; இந்தியாவும் ஏற்றுமதி செய்ய தயார்- இராணுவ அமைச்சர்

தென்னாசிய நாடுகள் தேஜஸ் விமானம் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் கூறியுள்ளார்.தேஜஸ் விமானத்தில் பறந்த பிறகு அவர் இந்த தகவலை கூறியுள்ளாா்.

தேஜஸ் விமானம் மிக இலகுவாக பாதுகாப்பாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.விமானத்தை உருவாக்க காரணமாக இருந்த ஹால் மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு தனது நன்றியை அவர் கூறியுள்ளார்.

நாம் சண்டையிடும் விமானங்களை ஏற்றுமதி செய்யும் அளவை அடைந்துவிட்டோம் என அவர் கூறியுள்ளார்.தேஜஸ் ஒரு பலபணி போர் விமானம் ஆகும்.இந்தியாவின் வான் பாதுகாப்பை உறுதி செய்ய இனி இந்த விமானங்கள் உதவும்.

விமானப்படை ஏற்கனவே முதல் தொகுதி தேஜஸ் விமானங்களை படையில் இணைத்துள்ளது.மேலும் கடற்படை வகை மேம்பாட்டில் உள்ளது.

தேஜஸ் விமானம் சூப்பர்சோனிக் வேகத்தில் பறக்க வல்ல பலபணி விமானம்.பயிற்சி விமானம் மற்றும் சண்டையிடும் விமானம் என இரு வகைகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.எடையை குறைக்க காம்போசிட் மெட்டீரியல்கள் போல பல பாகங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

பலவிதமான வான்-வான் ஏவுகணைகள்,வான்-தரை,வெடிகுண்டுகள் போன்றவற்றை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published.