பாக்.மீண்டும் போர் தொடுக்க நினைத்தால் ……ராஜ்நாத்சிங் பேச்சு

இந்தியா மீது போர்தொடுக்கும் தவறை மீண்டும் செய்யாதீர்கள் என்று பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1971ம் ஆண்டிலும் அதன் முன்பு 1965ம் ஆண்டிலும் இந்தியாவுடன் பாகிஸ்தான் இரண்டு போர்களை நடத்தியுள்ளது. அப்படி மீண்டும் போர் தொடுக்க பாகிஸ்தான் கருதினால் பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி என்ன ஆகும் என்பதை பாகிஸ்தான் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் ராஜ்நாத்சிங் எச்சரித்துள்ளார்.

பாட்னாவில் பேசிய அவர் பாகிஸ்தான் தனது மண்ணில் நிகழும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும்
காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது.

எவ்வளவு தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்புகிறது என்று பார்ப்போம். இந்தியாவுக்குள் நுழையும் ஒரு பயங்கரவாதிகூட திரும்பிப்போக முடியாது. அந்த அளவுக்கு எல்லையில் நமது ராணுவ வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

Thanthi

Leave a Reply

Your email address will not be published.