20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் 52 கிலோ எடைப்பிரிவில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அமித் பன்ஹால் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 45 ஆண்டு கால உலக குத்துச்சண்டை வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் இறுதிச்சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் அவருக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 52 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இப்போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதின் ஜோய்ரோ தங்கம் வென்றார்.
Thanthi