பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க திட்டம் தயார்: இராணுவ தளபதி பிபின் ராவத்

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க திட்டம் தயார்: இராணுவ தளபதி பிபின் ராவத்

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்கான இராணுவ பயிற்சிகளை இராணுவம் மேற்கொண்டுள்ளது என்றும் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தளபதி ராவத் கூறியுள்ளார்.

பாக் இந்தியாவுடனான போரை ஒதுக்கவே ( conventional war) செய்யும் இந்தியாவுடன் போர் செய்ய தேவையான பலம் அதனிடம் இல்லை எனவும் கூறியுள்ளார்.அதற்கு பதிலாக பாகிஸ்தான்  proxy war-ஐ அதிகப்படுத்தும்.அதாவது மறைமுகமாக பயங்கரவாதிகளை அதிகமாக அனுப்பும்.

காஷ்மீர் விவகாரத்தில் பாக் அடம்படிப்பதாகவும் கூறியுள்ளார்.இதற்கென உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்க்க முயற்சி செய்கிறது.

பாக் உடன் போர் செய்ய 15 கார்ப்ஸ் ( Army’s 15 Corps) பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.இனி இந்தியா தற்காப்பு தேசமாக மட்டுமே இருக்காது.அதே போல போர் பயிற்சிகளை  14 Corps பிரிவும் மேற்கொண்டுள்ளது.எனவே திட்டம் தயார் எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீநகரில் இருந்து செயல்படும்  15 Corps இது தவிர பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசன்களிலும் அதிகமாக கலந்துகொண்டுள்ளது.இது பாகிஸ்தானிக்கு எதிராக மட்டுமே பயிற்சி எடுக்கிறது.ஆனால் லே-வில் உள்ள 14 Corps மேற்கு மட்டுமல்ல சீனா உடனாக எந்த ஒரு மோதலுக்குமாக கிழக்கிலும் அதுசார்ந்த பயிற்சி எடுக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில் இருந்து நமது கவனத்தை எடுத்து  PoK மற்றும் Gilgit Baltistan பகுதிகளை பார்க்கும் நேரம் இது என கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக  PoK-வை மீட்க இராணுவம் தயாராக உள்ளதாகவும் அரசு தான் அதற்கான கட்டளைகளை இட வேண்டும் என கூறியிருந்தார்.
இது தவிர தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் பல்வேறு தலைவர்கள் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைப்பது குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

இனி பாக் உடன் பேச்சுவார்த்தை என்று ஒன்று நடந்தால் அது பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி தான் என இராணுவ அமைச்சர் முன்னதாக கூறியிருந்தார்.

மேலும் சில நாட்களுக்கு முன் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றும் இந்தியா சட்டத்தின் மூலம் அதை ஆளும் நாள் வரும் எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

பயங்கரவாதம் மூலமே பாக் இந்தியாவுடன் போரிட முடியும்.

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க யூகம் வகுக்கிறதா இந்தியா ??

Leave a Reply

Your email address will not be published.