இந்திய படையில் கம்பீரமாக வலம் வரும் பாக்., ஜர்பால் ராணி

1971-ல் நடைபெற்ற போரில் கைப்பற்றப்பட்ட பாக்., ஜீப் ஜர்பல் ராணி 48 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்திய படையில் கம்பீரமாக வலம் வருகிறது.

இது குறித்து ஓய்வு பெற்ற கர்னல் தில்லான் கூறியதாவது: கடந்த 1971-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அதன் விளைவாக வங்க தேசம் உருவானது. இதனிடையே ஷாகர்கர் எல்லைப்பகுதியில் ஜர்பார் பகுதியில் பாகிஸ்தானின் ஜீப் ஒன்று கைப்பற்றப்பட்டது

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த ஜீப் 48 ஆண்டுகள் கடந்த பின்னரும் நல்ல நிலையில் இயங்கிகொண்டிருக்கிறது. இது ஒரு போர் கோப்பை யாகும். தற்போது இது ஜர்பால் ராணி என பெயிரிடப்பட்டுள்ளது. என கூறினார். 

இந்த போர் கோப்பை விஜபி விருந்தினர்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மூத்த அதிகாரிகளின் மரியாதை காலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் உள்ள குல்மார்க்கில் இந்திய பனிச்சறுக்கு மற்றும் மலையேறும் குழுவிற்கு தலைமை தாங்குகிறது.


கடந்த1988 ம் ஆண்டு பஞ்சாப் போக்குவரத்து துறையில் சாலையில் ஓட்டுவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் பல எல்லை மோதலுக்கு சாட்சியாக ஜீப் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.