Breaking News

இந்தியா,தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் கடற்படை கூட்டுப் பயிற்சி

இந்தியா,தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் கடற்படை கூட்டுப் பயிற்சி

வரும் செப்டம்பர் 16 முதல் 20 தேதியில் இந்தியாவின் அந்தமான் கடற்பகுதியில் இந்திய,தாய் மற்றும் சிங்கப்பூர் கப்பல் படைகள் முதல் முறையாக இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடபட உள்ளது.

அடுத்த வருடம் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் இணையும் பட்சத்தில் இந்த மும்முணை பயிற்சி அடுத்த வருடம் பல நாடுகள் பயிற்சியாக மாற உள்ளது.மலாக்கா நீரிணை பகுதியில் வணிகம் பிரச்சனையில்லாம் நடைபெற ஒத்துழைப்பு என்ற வகையில் இந்த பயிற்சி நடைபெறும்.

தென்கிழக்காசிய நாடுகளுடனான உறவை அதிகரித்து மேம்படுத்த இந்த பயிற்சி உதவும்.மேலும் இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து ஒரு டாஸ்க் படையை ஏற்படுத்தி அந்தமான் முதல் பந்தா ஏசே வரை கண்காணிப்பை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயிற்சியில் இந்தியாவின் ரண்வீர் கலந்து கொள்ள உள்ளது.தாய் மற்றும் சிங்கப்பூர் போர்க்கப்பல்கள்  போர்ட் பிளேரில் இந்திய கப்பலுடன் இணைய செப்டம்பர் 16 அன்று பயிற்சி தொடங்கும்.

Leave a Reply

Your email address will not be published.