சர் க்ரீக் பகுதியில் பாக் தொடர் இராணுவம் குவிப்பு : வான் பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது
ஜம்மு மற்றும் காஷ்மீர் அல்ல, தற்போது சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
second Sir Creek Battalion எனப்படும் 32nd Creeks Battalion தற்போது தயாராக உள்ளதாம்.கராச்சிக்கு அருகே உள்ள ஹஜ்மாரோ க்ரீக் முதல் கராங்கோ க்ரீக் வரை உள்ள பகுதிகளுக்கு இந்த படை பொறுப்பு.
31st Creeks Battalion சுஜ்ஜாவால் என்னுமிடத்தில் உள்ளது.அதே போல 32nd பட்டாலியன் ஹாரோ என்னுமிடத்தில் உள்ளது.மேலதிக பட்டாலியன்களும் தயாராக உள்ளதாக பாக் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மேலதிக இன்பான்ட்ரி மற்றும் அம்பிபியஸ் (நீர்நிலம்) பட்டாலியன்களும் வருகையில் உள்ளனவாம்.முன்னாள் வெறும் 2 பட்டாலியன்கள் இருந்த நிலையில் தற்போது ஒன்பது பட்டாலியன்களாக உயர்ந்துள்ளது.
கடலோர பாதுகாப்புக்கு அதிக கடலோர ரோந்து கப்பல்களை பாக் எதிர்பார்த்து உள்ளது.
வான் பாதுகாப்பு வலிமையையும் அந்த பகுதியில் அதிகரித்து வருகிறது.புதிய ராடார் கட்டுப்படுத்தி துப்பாக்கிகள்,குறை தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் தொலைத் தொடர்ப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது
மெஸ்ரான் மற்றும் கராச்சி பகுதியிலும் 4 பி-3 ஓரியன் மற்றும் 2 ATRகள் உள்ளன.இவை வான் பகுதி கண்காணிப்புக்கு உதவும்.
1999 கார்கில் போர் முடிந்த பின்னர் இந்த பகுதியில் தான் பாக்கின் அட்லாண்டிக் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.
தவிர தற்போது பாக் கமாண்டோ வீரர்களையும் இங்கு நிலைநிறுத்தியுள்ளதாக சில நாட்கள் முன் தகவல் வெளியாகியிருந்தது.
இந்தியாவின் குஜராத் பகுதியையும் பாக்கின் சிந்த் பகுதியையும் இந்த சர் க்ரீக் பகுதி தான் பிரிக்கிறது.