பட்ஜெட்டை உயர்த்தி தர கடற்படை வேண்டுகோள்

பட்ஜெட்டை உயர்த்தி தர கடற்படை வேண்டுகோள்

கடற்படைக்கான பட்ஜெட்டை உயர்த்தி வழங்குமாறு கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் கூறியுள்ளார்.

நாங்கள் இன்னும் அதிகமாக பணம் எதிர்பார்க்கிறோம்,  2012-2013 காலகட்டத்தில் பாதுகாப்பு பட்ஜெட்டில் கடற்படையின் பங்கு 18சதவிகிதமாக இருந்தது ஆனால் தற்போது அது 13.6 சதவிகிதமாக குறைந்துள்ளது நாங்கள் மறுபடியும் 18-20  சதவிகிதத்தை எட்ட விரும்புகிறோம் எனவே எங்களுக்கு இன்னும் அதிக முதன்மை ஒதுக்கீடு தேவை என கருதுகிறோம் என கூறியுள்ளார்.

புதிய புரோஜெக்டுகளுக்கு நிதி வழங்கவும் பணம் தேவையாக உள்ளது.மேலும் அதிநவீன ஆம்கா தயாரிப்பை கடற்படை ஊக்குவிக்கிறது.

மேலும் கூறுகையில்  இந்திய கடற்படையில் ஒற்றை என்ஜின் தேஜஸ் இணைக்கப்படாது அதற்கு மாற்றாக நமது சொந்த தயாரிப்பான  ஐந்தாம் தலைமுறை இரட்டை என்ஜின் ஆம்கா படையில் இணைக்கப்படும். கடற்படையை பொறுத்தவரை பணம் கொடுப்பதில் ஒருபோதும் குறைவைக்கவில்லை, நாங்கள் இதுவரையிலும் அவர்களுக்கு உதவியாகவே இருந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

வருகின்ற 28ஆம் தேதி இந்திய கடற்படையில் பி17ஏ ஃபிரிகேட் ரகத்தின் (அதாவது நீலகிரி ரகத்தின்) முதன்மை கப்பலான ஐ.என்.எஸ் நீலகிரி எனும் ஃபிரிகேட் கப்பலும் , ஸ்கார்பீன் ரக நீர்முழ்கி கப்பலான ஐ.என்.எஸ் காந்தேரியும் , விமானந்தாங்கி கப்பல்களை பழுது பார்க்க பயன்படும் DRY DOCK ஒன்றும் மும்பையில் வைத்து இந்திய கடற்படையில் இணைக்கப்படும்.

தென் சீன கடல் பிரச்சினையில் தெளிவாக உள்ளோம் சர்வதேச விதிகளின்படி கடல்சார் வணிகம் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இருத்தல் கூடாது. மேலும் இந்திய கடற்படை அந்த பகுதியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது தான் வியட்நாம் கடற்படையுடன் பயிற்சி மேற்கொண்டு விட்டு 2019ஆம் ஆண்டிற்கான “மலபார் கடற்படை போற்ப்யிற்சி” மேற்கொள்ள ஜப்பான் நோக்கி நமது கப்பல்கள் பயணிக்கின்றன என்றார்.

வைஸ் அட்மிரல் அஷோக் குமார் நமது தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published.