கேப்டன் அருண்சிங் ஜஸ்ரோசியா

கேப்டன் அருண்சிங் ஜஸ்ரோசியா

1968ம் ஆண்டு ஆகஸ்டு 16ல் பஞ்சாபின் பதன்கோட் மாவட்டத்தில் உள்ள சுஜான்பூரில் லெப் கலோ பிரபாத் சிங் சத்ய தேவிக்கு மகனாய் பிறந்தார் அருண் சிங் அவர்கள்.அவரது அப்பாவை போலவே தாத்தாவும் முன்னாள் இராணுவ வீரர் தான்.பாரம்பரியமாக இராணுவக் குடும்பத்தில் பிறந்த அருண் அவர்களுக்கும் இராணுவ உடை தரித்து களம் காண இளவயது முதலே தீராத ஆசை.

பதன்கோட்டில் பள்ளிப் படிப்பை முடித்து தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தார்.பயிற்சி முடித்து 8வது பீகார் ரெஜிமென்டில் 17 டிசம்பர் 1989ல் இணைந்தார். 8வது மலையக படை மற்றும் 28வது இன்பான்ட்ரி பிரிவின் கீழ் “ஆபரேசன் ரக்சக்”ல் தனது ஆரம்பகால பணியை தொடர்ந்தார்.மிக விரைவிலேயே தனது வீரத்தை நிரூபித்து சேனா விருது பெற்றார்.அதன் பிறகு இராணுவத்தின் சிறப்பு படைப் பிரிவான 9வது பாரா படையில் இணைந்தார்.தங்களது அதிபயங்கர டேர்டெவில் ஆபரேசன்களுக்கு புகழ்பெற்றது இந்தப் பிரிவு.

லோலப் சமவெளி: 15 Sep 1995

1995களில் கேப்டன் அருண் அவர்களின் படைப் பிரிவு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. 15 Sep 1995 அன்று கேப்டனின் பிரிவுக்கு 20 பயங்கரவாதிகள் லோலப் சமவெளியின் ஒரு குகைக்குள் பதுங்கி இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றது.கேப்டன் தலைமையில் ஆபரேசன் நடத்தி பயங்கரவாதிகளை பிடிக்க முடிவு செய்யப்பட்டது.கேப்டனும் அவரது வீரர்களும் மிக கடினமாக ஏறி சந்தேகத்திற்கிடமான இடத்தை அடைந்தனர்.பத்து மணி நேரத்திற்கு பிறகு 3000மீ உயரத்திலா இருந்த பகுதியை அடைந்திருந்தனர்.

வீரர்கள் குழு இடத்தை அடைந்ததுமே குகைக்குள் நன்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் வீரர்களை தாக்க தொடங்கினர்.நிலைமை உடனடியாக உணர்ந்த கேப்டன் அருண் நேரடியாக ஒரு பயங்கரவாதியை தனது கமாண்டோ கத்தியால் குத்தி வீசினார்.ஒரு கிரேனேடை வீசி மற்றொரு பயங்கரவாதியை வீழ்த்தி குகையை நோக்கி முன்னேறினார்.

கிட்டத்தட்ட இதே நேரத்தில் கேப்டன் அருண் அவர்களின் தோல்பட்டையில் ஒரு குண்டு துளைத்து சென்றது.அவர் படுகாயம் அடைந்தார்.ஆனால் பின்வாங்கவில்லை.தனது துப்பாக்கியால் தன்னை சுட்டு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தினார்.அவர் குகையை நெருங்கிய போது மேலும் இரு தோட்டாக்கள் அவரது வயிறு மற்றும் நெஞ்சில் பாய்ந்தது.

அவரது செய்கையால் உற்சாகமும் எதிரிகள் மீது கோபமும் கொண்ட மற்ற வீரர்கள் இரு மடங்கு பலத்துடன் பயங்கரவாதிகளை சண்டையிட்ட வீழ்த்தினர்.அதே நேரத்தில் கேப்டன் அருண் வீரமரணம் அடைந்தார்.

 தைரியம், தியாகம் மற்றும் அதிகபட்ச வீரம் காரணமாக அவருக்கு அமைதிக் காலத்தில் வழங்கப்படும் உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

பின் 1999ல் பஞ்சாப் அரசு அவருக்கு நிசான் இ கல்சா விருது வழங்கியது.

Capt Arun Singh Jasrotia is survived by his parents Lt Col Prabhat Singh Jasrotia an.d Mrs Satya Devi.

Leave a Reply

Your email address will not be published.