Breaking News

சுகாய் விமானங்களுக்காக முதல் தொகுதி Astra BVRAAM ஆர்டர் செய்துள்ள விமானப்படை

சுகாய் விமானங்களுக்காக முதல் தொகுதி Astra BVRAAM ஆர்டர் செய்துள்ள விமானப்படை

இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பு அஸ்திரா ஏவுகணை
( beyond visual range air-to-air missile – BVRAAM) ஒரு வான் -வான் தாக்கும் ஏவுகணை ஆகும்.

15 வருட மேம்பாட்டிற்கு பிறகு தற்போது படையில் இணைய உள்ளது.விமானப்படை தனது   Sukhoi-30MKI விமானங்களுக்காக 200 ஏவுகணைகள் ஆர்டர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர தற்போது Defence Research and Development Organisation அஸ்திராவின் 110-km தாக்கும் தொலைவை  160-km ஆக அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது.கண்ணுக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளுள் அஸ்திரா BVRAAM ஒரு சிறந்த ஏவுகணை ஆகும்.

 US, Russia, France மற்றும் Israel ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இதுபோன்றதொரு ஏவுகணைகளுக்கான தேவையை பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை உணர்ந்தது.

 3.57-metre நீளமும்  154-kg எடையும் கொண்டது.ஒலியின் வேகத்தை விட நான்கு மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது.அதாவது Mach 4.5.இந்தியாவின் Bharat Dynamics
நிறுவனம் இந்த ஏவுகணைகளை தயாரிக்கும்.

Russian-origin Sukhois விமானங்களுக்கு பிறகு இந்தியாவின் Tejas light combat aircraft இந்த ஏவுகணை பொருத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published.