அதிநவீன AK-203 துப்பாக்கி-இந்தியா தயாரிக்க உள்ளது

அதிநவீன AK-203 துப்பாக்கி-இந்தியா தயாரிக்க உள்ளது

இந்தியஇராணுவம் இப்போதும் கூட பழயை இன்சாஸ் துப்பாக்கிகளை தான் பயன்படுத்தி வருகிறது.இந்திய இராணுவத்தின் பொது தாக்குதல் துப்பாக்கியாக இன்சாஸ் உள்ளது.இதை மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது இரஷ்ய ஏகே ரக துப்பாக்கிகளிலேயே அதிநவீன துப்பாக்கியான ஏகே-203 இந்தியாவில் தயாராக உள்ளது.

இந்திய இரஷ்ய நிறுவனங்கள் இணைந்து உத்திரப்பிரதேசத்தில்
 “Indo-Russian Rifles Private Limited,” என்ற நிறுவனத்தை அமைக்க உள்ளன.இந்த புதிய ஏகே துப்பாக்கிகள் தற்போது படையில் உள்ள 1B1 INSAS rifle மற்றும் பழைய ஏகேஎம் துப்பாக்கிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும்.

AK-74Mன் ஒரு வகை தான் ஏகே-203.இந்த AK-74M தான் இரஷ்ய இராணுவப் படைகளின் முக்கிய துப்பாக்கி ஆகும்.இந்த AK-203 துப்பாக்கி 7.62×39 mm ரக தோட்டாக்களை பயன்படுத்தும்.லேசர்,லைட் என பலவும் இணைத்து பயன்படுத்தலாம்.

பழைய ஏகே போலல்லாமல் இந்த புதிய AK-203 மடித்துக்கொள்ளக் கூடிய பின்புற பட்-உடன் வரும்.துப்பாக்கியின் மேல் பகுதி முழுதுமாக  Picatinny rail வரும்.இதன் மூலம் பல வகையான பார்க்கும் கருவிகளை பொருத்த முடியும்.

இந்தியா கிட்டத்தட்ட  750,000 துப்பாக்கிகள் வரை தயாரிக்க உள்ளது.இவை அனைத்துமே அதிநவீன வகை.இந்த துப்பாக்கிகள் தான் இனி வரும் காலங்களில் இந்திய இராணுவத்தின் முன்னனி தாக்கும் துப்பாக்கிகளாக இருக்கும்.இது தவிர மேலும் பல ரக துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

இந்த வருட முதற்பகுதியில் தான் சிக் சாயர் மற்றும் கேரக்கால் நிறுவனத்திடம் இருந்து துப்பாக்கிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இவை அனைத்தும் 503 மில்லியன் டாலர்கள் செலவில் வாங்கப்பட முடிவு செய்யப்பட்டது.

சிக் நிறுவனம் கிட்டத்தட்ட 72400  SIG 716 battle துப்பாக்கிகளை வழங்கும்.இதுவும் 7.62 NATO ரவுண்டுகளை சுடக்கூடியது.மேலும் கேரக்கால் நிறுவனம் 94,000 CAR816 தாக்கும் துப்பாக்கிகளை வழங்கும்.இந்த துப்பாக்கி 5.56 NATO ரவுண்டுகளை சுடக்கூடியது.

 AK-203, SIG 716, மற்றும் CAR816 என புதிய ரக துப்பாக்கிகள் இந்திய இராணுவத்தில் இணைய உள்ளது.கிட்டத்தட்ட புது யுகம் போல தான்.

கடைசி வரை இந்தியாவின் ஆர்டினன்ஸ் பேக்டரி இந்தியாவிற்கு ஒரு நல்ல துப்பாக்கியை தராது போல…

Leave a Reply

Your email address will not be published.