இன்று படையில் இணைகிறது
AH-64E அப்பாச்சி வானூர்தி
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள அப்பாச்சி வானூர்தி இந்திய விமானப்படையில் இணைய உள்ளது.பதன்கோட் தளத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்திய விமானப்படையின் தாக்கும் வானூர்திகள் படைப் பிரிவின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து இந்த அப்பாச்சி AH-64E Apache Guardian தாக்கும் வானூர்திகள் ஆர்டர் செய்யப்பட்டன.
பதன்கோட் தளத்தில் நடக்கும் விழாவை விமானப்படை தளபதி தனோவா தலைமை ஏற்கிறார்.அப்பாச்சி தான் உலகின் தலைசிறந்த தாக்கும் வானூர்தியாக கருதப்படுகிறது.
இந்த முதல் தொகுதி வானூர்திகள் கடந்த ஜீலை 27ல் காசியாபாத்தில் உள்ள ஹின்டன் படைத் தளத்திற்கு வந்தன.இதை பலமுறை சோதித்து பறந்த பின் விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்க பதன்கோட் கொண்டு செல்லப்பட்டது.
பழைய மி-35 தாக்கும் வானூர்திகளுக்கு மாற்றாக இந்த அப்பாச்சி வானூர்தி படையில் இணைக்கப்படுகிறது.க்ரூப் கேப்டன் ஷாய்லு இந்த புதிய ஸ்குவாட்ரானை கமாண்ட் செய்வார்.
உலகின் பல நாடுகள் தற்போது அப்பாச்சி வானூர்தியை உபயோகித்து வருகின்றன.இந்த வானூர்தியில் 30-mm இயந்திர துப்பாக்கி உள்ளது.ஒரு முறைக்கு1200ரவுண்டுகள் சுடக்கூடியது.
இதை தவிர டாங்க் எதிர்ப்பு ஹெல்ஃபயர் ஏவுகணைகளும் வருகிறது.மேலும் Hydra Unguided Rocket வருகிறது.நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்க கூடியது.
எதிரி எல்லைக்குள் நுழைந்து சிறப்பாக செயல்படக்கூடியது.இந்த வானூர்திகளை இந்தியா பாக் எல்லைக்கு அருகே நிலைநிறுத்துவது இந்திய விமானப்படையின் கையை ஓங்கச் செய்யும்.