ராணுவத்தில் பணியில் இருந்து டச்சு எனும் 9 வயது நாய் உயிரிழப்பு

இணுவத்தில் இருந்துவந்த 9 வயது மோப்ப நாய் “டச்சு” உயிரிழந்த நிலையில், ராணுவ மரியாதையுடன் நாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிழக்கு ராணுவ பிரிவில் இருந்துவந்த டச்சு எனும் இந்த நாய், பல்வேறு காலக்கட்டங்களில் இந்திய ராணுவத்தினருக்கு பேருதவியாக இருந்துள்ளது. பதுக்கி வைக்கப்படும் வெடுகுண்டுகளை கச்சிதமாக கண்டறிந்து அசம்பாவிதங்கள் நேரா வண்ணம் தவிர்ப்பது, குற்றச்சம்பவங்ள் தொடர்பான தடயங்களை கண்டறிவது என பல்வேறு சம்பவங்களில் நினைவுகூரத்தக்க களப்பணிகளை டச்சு செய்துள்ளது. ராணுவ வீரர்களின் செல்லப்பிள்ளை போலவும், தோழன்போலவும் விளங்கிவந்த டச்சு, கடந்த 11ஆம் தேதி இயற்கை மரணம் அடைந்தது.
இந்த நிலையில், கொல்கத்தாவில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் மலர்கொத்துகள்கொண்டு அலங்கரிக்கப்பட்டு ராணுவ மரியாதையுடன் டச்சுவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.