தாக்கும் படையின் புது சாகாப்தம் :8 அப்பாச்சி படையில் இணைப்பு

தாக்கும் படையின் புது சாகாப்தம் :8 அப்பாச்சி படையில் இணைப்பு

இந்திய விமானப் படைக்காக அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட 22 அப்பாச்சி 64இ வானூர்தியில் முதல் தொகுதி 8 வானூர்திகள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன.பதன்கோட் தளத்தில் தளபதி தனோவா தலைமையில் விழாவில் அப்பாச்சி வானூர்தி இணைக்கப்பட்டது.

எட்டு விமானங்களும் இரு தொகுதிகளாக கடந்த ஜீலையில் ஹின்டன் விமானப்படை தளத்திற்கு வந்தன.

பழைய மி-35 தாக்கும் வானூர்திகளுக்கு மாற்றாக இந்த வானூர்திகள் வாங்கப்பட்டுள்ளன.டாங்கை வீழ்த்தும் வழிகாட்டு ஏவுகணை கள் ,வான்-வான் ஏவுகணைகள் ,ராக்கெட்டுகள் மற்றும் அம்யூனிசன்களுடன் அப்பாச்சி வருகிறது.

அதிநவீன எலக்ட்ரானிக் போர்முறை திறனுடன் விளங்குகிறது அப்பாச்சி.பாரில் நடந்த பல போரில் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்துள்ளது அப்பாச்சி.

Leave a Reply

Your email address will not be published.