விமானப்படைக்கு 70 அடிப்படை பயிற்சி விமானங்கள் வாங்க திட்டம்
இந்தியாவின் ஹால் நிறுவனத்திடம் இருந்து 70 பயிற்சி விமானங்கள் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மூன்று மாதத்திற்குள் வாங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக request for proposal (RFP)ஐ ஹால் நிறுவனத்திற்கு விமானப்படை அனுப்ப உள்ளது.ஹால் நிறுவனம் Hindustan Turbo Trainer-40 (HTT-40) என்ற பயிற்சி விமானத்தை மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது HTT-40 விமானம் பல்வேறு விதமான கடினமான சோதனைக்கு உட்படுத்தப்படுத்த வருகிறது.
விமானப்படையின் தேவைகளை இந்த விமானம் பூர்த்தி செய்தால் மட்டுமே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.தற்போது சோதனையில் இருக்கும் விமானம் விமானப்படையின் தேவைகளை பூர்த்தி செய்யும் என ஹால் கூறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான் விமானம் தனது six-turn spin (towards the right) சோதனையை முடித்தது.
சோதனைகள் சரியாக முடியும் பட்சத்தில் 2021ல் விமானம் தொடர் தயாரிப்புக்கு உள்ளாகும்.
விமானப்படையில் இணைய விரும்பும் இளைஞர்கள் விமானிகளாக மூன்று விதமான விமானி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.அடிப்படை பயிற்சிக்காக பிளாட்டஸ் விமானமும் , இடைப் பயிற்சிக்காக கிரண் மற்றும் கடைசியாக ஹாக் அதிநவீன பயிற்சி விமானத்தில் பயிற்சி பெறுகின்றனர்.