இரஷ்யன் சு-57 “Frazor”
அமெரிக்காவின் எப்-22 ஐந்தாம் தலைமுறை விமானத்திற்கு இணையாக இரஷ்யாவும் முயன்று மேம்படுத்திய ஐந்தாம் தலைமுறை விமானம் தான் சு-57 விமானம்.
இரஷ்யாவால் மிக எளிதாக இதை செய்து முடித்துவிடவில்லை.கடந்த 2010 ஜனவரியில் தனது பயணத்தைை தொடங்கியது.தற்போது இரஷ்யா தனது விமானப்படைக்காக 76 விமானங்களை வாங்க உள்ளது.
இந்தியாவும் இரஷ்யாவும் இணைந்து இந்த ஏர்பிரேமை அடிப்படையாக கொண்டு இந்திய காலநிலைக்கு ஏற்ற விமானத்தை இணைந்து தயாரிக்க முடிவெடுத்து பின்னாலில் இந்த திட்டத்தில் இருந்து இந்தியா விலகி கொண்டது.
அதிக விலை, ஸ்டீல்த் நிலை குறித்த பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்கள் இதற்காக கூறப்பட்டன.எனினும் இரஷ்யா தற்போது சு-57 விமானத்தின் ஏற்றுமதி வகையை தற்சமயம் நடைபெற்ற விமான கண்காட்சியில் வெளியிட்டது.இந்திய விமானப்படை அதிகாரிகள் அதை பார்வையிட்டதாகவும் தகவல் வெளியானது.
சு-57க்கான புதிய என்ஜின் பொருத்தப்பட்ட உடன் இந்தியா இந்த விமானங்களை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சீனா தற்போது ஜே-20 விமானத்தை படையில் இணைத்துவிட்டது.இந்த சு-57 விமானங்கள் சீன விமானத்தை எதிர்க்க இந்திய விமானப்படைக்கு உதவும்.
ஹால் நிறுவனம் ஏஎம்சிஏ விமானத்தை மேம்படுத்துவது வரை இந்த விமானங்களை எதிர்பார்க்கலாம்.2025ல் தான் ஏஎம்சிஏ முதல் பறப்பை பறக்கும்.2022-23 வாக்கில் சு-57 புதிய என்ஜின் இணைத்துவிடலாம்.