சென்னை பரங்கிமலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீர் பள்ளதாக்கில் உள்ள தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருந்து வந்த தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், எல்லை மீறி இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பி வருவதாகவும், ஆனால், தீவிரவாதிகளை அடக்க இந்திய ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் மதத்தின் பெயரால் தீவிரவாதம் பரப்பப்படுவதாகவும் பிபின் ராவத் குற்றம் சாட்டினார்
நியூஸ் 7 தமிழ்