எகிப்து நாட்டிடம் இருந்து பழைய மிராஜ் 5 ரக விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்

எகிப்து நாட்டிடம் இருந்து பழைய மிராஜ் 5 ரக விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்

ஹோரஸ் என்ற நிலைக்கு அப்கிரேடு செய்யப்பட்ட பழைய மிராஜ் விமானங்களை எகிப்து நாட்டிடம் இருந்து பெற பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி  வருகிறது.இந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

36 விமானங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு தனது வான் பகுதியை காப்பதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது.

இந்த விமானங்கள் எகிப்து விமானப்படையில் இருந்து விடுவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மிராஜ் விமானங்களில் வகைகளில் ஒரு வகையான மிராஜ் 2000 விமானத்தை கொண்டு தான் பாலக்கோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

Leave a Reply

Your email address will not be published.