தாவூத் இப்ராகிம், மசூத் அசார் உள்ளிட்ட 4 பேரை தீவிரவாதிகளாக அறிவித்த இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
தனிநபர்களை தீவிரவாதிகளாக அறிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களின் தலைவர்கள் மசூத் அசார், மற்றும் ஹபீஸ் சையத் ஆகியோரை இந்தியா தீவிரவாதிகளாக அறிவித்துள்ளது. இதே போன்று தாவூத் இப்ராகிம் , ரெஹ்மான் லக்வி ஆகியோரும் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நான்கு பேரும் நீண்ட காலமாகவே அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள்..அவர்கள் சார்ந்துள்ள இயக்கங்களையும் அமெரிக்கா தடை செய்துள்ளது.