மேலும் 36 ரபேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட வாய்ப்பு
மேலதிக 36 ரபேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய ஆர்டர் அடுத்த வருடம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன் தான் Indian Air Force முதல் ரபேல் விமானத்தை பிரான்சிடம் இருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலதிக 36 ரபேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்படும் பட்சத்தில் மொத்த ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 72 ஆகும்.இது இந்திய விமானப்படையின் சரிந்து வரும் ஸ்குவாட்ரான்கள் எண்ணிக்கைக்கு மீட்பாக அமையும்.மேலும் எதிர்காலத்தில் பாலக்கோட் போன்ற தாக்குதல்களை மிக எளிதாக மேற்கொள்ள முடியும்.
எப்-16 விமானத்தை விங் கமாண்டர் அபி அவர்கள் வீழ்த்திய பிறகு அதை வாங்க இந்தியா முயற்சிக்கவில்லை.அதே போலவே எப்-21 கூட இந்தியா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் Boeing F-18 வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.எப்-18ஐ விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து செயல்படுத்த முடியும்.
SAAB’s Gripen-E வாங்கப்பட வாய்ப்பில்லை போல தெரிகிறது. Russian Mig-35 மற்றும் Sukhoi-Su-35 ரபேல் கூட போட்டியிட்டு வெற்றிபெற வாய்ப்பில்லை.
மேலும் 18 Su-30 MKI மற்றும் 21 Mig-29 fighter விமானங்கள் வாங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.மேலும் விமானப்படையில் உள்ள 272 aircraft of Su- 30 MKI fleet-யும் அப்கிரேடு செய்து நவீனப்படுத்தப்பட உள்ளது.