இந்தியாவின் சு-30ஐ சுட்டு வீழ்த்தியதாக நினைவு சின்னம் அமைத்த பாகிஸ்தான்
பாலக்கோட் பதிடியும் அதன்பின் பாகிஸ்தான் எதிர்தாக்குதல் நடத்தியதும் நாம் அறிந்ததே.அந்த தாக்குதலை முறியடிக்க நமது சுகாய் மற்றும் மிக்21 ரக விமானங்கள் பறந்தன.
இந்த நேரத்தில் தான் ஒரு பாக் எப்-16 விமானத்தை விங் கமாண்டர் அபி அவர்கள் சுட்டுவீழ்த்தி தானும் சுடப்பட்டு பாக் எல்லைக்குள் விழுந்தார்.அதன் பின் நடந்ததும் நாம் அறிவோம்.
ஆனால் இதே சம்பவத்தில் ஒரு இந்திய சுகாய் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது.இந்நிலையில் இதை நினைவுகூறும் வகையில் நினைவு சின்னமும் அமைத்துவிட்டது.ஆனால் இந்திய விமானப்படை இதை அறவே மறுத்துவிட்டது.
“பாக் எப்-16பி விமானத்தின் விமானி ஸ்குவாட்ரான் லீடர் ஹாசன் முகமது சித்திக் இந்திய சுகாய்விமானத்தை AIM-120 AMRAAM ஏவுகணை மூலமாக வீழ்த்தியதாகவும் , இந்திய சுகாய் விமானத்தின் குறிச்சொல் அவெஞ்சர் என்பதும் அது விமானப்படையின் 221வது ஸ்குவாட்ரானை சேர்ந்தது” எனவும் அந்த சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
“ஆபரேசன் ஸ்விப்ட் ரிடார்ட்” என இதற்கு பெயர் வைத்துள்ளது பாகிஸ்தான்.இதில் பங்கேற்றவர்களுக்கு விருதுகளும் வழங்கியது.
இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன என்றால் அபிநந்தன் அவர்களின் மிக்-21 விமானத்தை வீழ்த்திய நாமன் அலிகான் என்பவருக்கு ( படத்தில் வலது) சிதாரா ஐ சுரத் என்ற விருது வழங்கியுள்ளது.
இந்திய சுகாய் விமானத்தை வீழ்த்தியவர் என் பாக் கூறும் ஹசன் சித்திக் என்பவருக்கு தம்கா-இ-சுரத் என்ற விருதும் வழங்கியுள்ளது.
ஆனால் தம்கா இ சுரத் விருது சிதாரா இ சுரத் விருதை விட குறைந்த மதிப்பே உடையது.
ஒரு நவீன பெரிய புதிய சுகாய் விமானத்தை வீழ்த்தியவர் என பாக் கூறும் ஹசன் சித்திக் அவர்களுக்கு எதற்கு குறைந்த மதிப்பை உயை விருது தரப்படுவேண்டும்.இந்த போலிச் சம்பவத்தை எப்போதும் போல உண்மையாக்க ஒரு நினைவு சின்னத்தையும் பாக் கட்டிவிட்டது.