வரும் செப்டம்பர் 28ல் படையில் இணைகிறது காந்தேரி

வரும் செப்டம்பர் 28ல் படையில் இணைகிறது காந்தேரி

இந்திய நேவியின் ஸ்கார்பின் வகை நீர்மூழ்கியின் இரண்டாவது நீர்மூழ்கியான காந்தேரி வரும் செப் 28ல் படையில் இணைகிறது.அன்றே புதிய ஸ்டீல்த் வழிகாட்டு ஏவுகணை கொண்ட பிரைகேட் கப்பல் ( Project P-17A ) கடற்சோதனைக்காக ஏவப்படுகிறது.இது சிவாலிக் வகை கப்பல்களுக்கு அடுத்த வகை ஆகும்.

முதல் நீர்மூழ்கியான கல்வாரி கடந்த 2017 டிசம்பரில் படையில் இணைக்கப்பட்டது.

 மேலும் அடுத்த நான்கு ஸ்கார்பின் நீர்மூழ்கிகள் கட்டுமானத்தின் பல்வேறு கட்டத்தில் உள்ளது.

தவிர புதிதாக ஏவப்படும் பிரைகேட் கப்பல்கள் சிவாலிக் வகையை விட அதிக ஸ்டீல்த்,சக்திவாய்ந்த ரேடார் மற்றும் ஆயுதங்களை பெற்றிருக்கும்.எதிரிகளை துல்லியமான உறுதியாக தாக்க பிரம்மோஸ் மற்றும் எந்தவித வான் இலக்குகளையும் தடுத்து அழிக்க பாரக் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தக் கப்பல்கள் பெற்றிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.