230 புதிய விமானங்கள் ஆர்டர் செய்ய விமானப்படை தயார்

230 புதிய விமானங்கள் ஆர்டர் செய்ய விமானப்படை தயார்

இந்தியவிமானப் படையை நவீனமாக்க போதிய பணம் இல்லாமல் விமானப்படை தவித்து வருகிறது.இதனால் புதிய  விமானங்களும் அதிநவீன ஏவுகணைகளும் வாங்க முடியாமலும் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்கள் நிலுலையிலும் உள்ளதால் நவீனமயமாக்கல் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதை சரிகட்ட அரசிடம் மேலதிக பண உதவியை விமானப்படை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானப்படைக்கென்று ஒதுக்கப்படும் Rs 39,300 கோடிகள் விமானப்படையை மெருகூட்ட போதாது.எனவே மேலதிக பணம் கேட்கப்பட்டுள்ளது.தனது நவீனமாக்கலை தொடர குறைந்தது மேலதிக 40,000 கோடிகள் தேவைப்படுதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

விமானப்படைக்கு மிக அவசியமாக தேவைப்படும் தளவாடங்களை வாங்க பில்லியன்கள் டாலர்கள் தேவைப்படுகிறது.புதிய 114 நடுத்தர எடை விமானங்கள்,83 இலகுரக விமானங்கள், மேலதிக  MiG-29s மற்றும் Sukhoi-30s, ஆறு எரிபொருள் நிரப்பும் விமானங்கள், 56 புதிய நடுத்தர ரக போக்குவரத்து விமானங்கள் மற்றும் 70 அடித்தள பயிற்சி விமானங்கள் தேவை.இவைகள் வாங்க பல ஆயிரம் கோடிகள் தேவை.

இவை தவிர ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தகளுக்கு பணம் தர வேண்டும்.ஏற்கனவே 36 ரபேல், 40 LCA Tejas Mk-1, 5 units S-400 Triumf air defence missile systems ,22  Apache AH-64E attack helicopters மற்றும் CH-47F Chinook heavy-lift ஆகியவை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு படையில் இணைந்தும் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.