Day: September 23, 2019

ஜம்மு காஷ்மீரில் 40 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு

September 23, 2019

ஜம்மு காஷ்மீரின் கதுவா பிராந்தியத்தில் உள்ள மல்ஹார் என்ற இடத்தில் 40 கிலோ வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர். உரிய நேரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரும் தாக்குதல் நடத்தும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வெடிபொருட்கள் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராணுவ தளபதி பிபின்ராவத், பாலகோட் முகாமை பாகிஸ்தான் மீண்டும் பயன்படுத்த துவங்கியிருப்பதாகவும், 500 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ […]

Read More

மேலும் 36 ரபேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட வாய்ப்பு

September 23, 2019

மேலும் 36 ரபேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட வாய்ப்பு மேலதிக 36 ரபேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஆர்டர் அடுத்த வருடம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் தான் Indian Air Force முதல் ரபேல் விமானத்தை பிரான்சிடம் இருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலதிக 36 ரபேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்படும் பட்சத்தில் மொத்த ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 72 […]

Read More

இந்தியாவுக்குள் ஊடுருவ 500 தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர் – ராணுவத் தளபதி

September 23, 2019

சென்னை பரங்கிமலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.  காஷ்மீர் பள்ளதாக்கில் உள்ள தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருந்து வந்த தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், எல்லை மீறி இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பி வருவதாகவும், ஆனால், தீவிரவாதிகளை அடக்க இந்திய ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  ஜம்மு-காஷ்மீரில் மதத்தின் பெயரால் தீவிரவாதம் பரப்பப்படுவதாகவும் பிபின் ராவத் குற்றம் சாட்டினார்  நியூஸ் 7 […]

Read More

“பாகிஸ்தானின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வருகிறது” – இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்

September 23, 2019

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருந்து வருவதாக, ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானின் தாக்குதல்களை எப்படி கையாள வேண்டும் என்பது இந்திய ராணுவத்துக்கு தெரியும் என கூறினார். நமது வீரர்களுக்கு தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தெரியும் என்றும் ராணுவ தளபதி கூறினார். மிகுந்த விழிப்புணர்வுடன் இந்திய ராணுவம் உள்ளதாகவும், அதனால் பாகிஸ்தானின் தீவிரவாத ஊடுருவல் திட்டங்களை […]

Read More

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க திட்டம் தயார்: இராணுவ தளபதி பிபின் ராவத்

September 23, 2019

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க திட்டம் தயார்: இராணுவ தளபதி பிபின் ராவத் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்கான இராணுவ பயிற்சிகளை இராணுவம் மேற்கொண்டுள்ளது என்றும் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தளபதி ராவத் கூறியுள்ளார். பாக் இந்தியாவுடனான போரை ஒதுக்கவே ( conventional war) செய்யும் இந்தியாவுடன் போர் செய்ய தேவையான பலம் அதனிடம் இல்லை எனவும் கூறியுள்ளார்.அதற்கு பதிலாக பாகிஸ்தான்  proxy war-ஐ அதிகப்படுத்தும்.அதாவது மறைமுகமாக பயங்கரவாதிகளை அதிகமாக அனுப்பும். காஷ்மீர் விவகாரத்தில் பாக் […]

Read More

பாக்.மீண்டும் போர் தொடுக்க நினைத்தால் ……ராஜ்நாத்சிங் பேச்சு

September 23, 2019

இந்தியா மீது போர்தொடுக்கும் தவறை மீண்டும் செய்யாதீர்கள் என்று பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1971ம் ஆண்டிலும் அதன் முன்பு 1965ம் ஆண்டிலும் இந்தியாவுடன் பாகிஸ்தான் இரண்டு போர்களை நடத்தியுள்ளது. அப்படி மீண்டும் போர் தொடுக்க பாகிஸ்தான் கருதினால் பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி என்ன ஆகும் என்பதை பாகிஸ்தான் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் ராஜ்நாத்சிங் எச்சரித்துள்ளார். பாட்னாவில் பேசிய அவர் பாகிஸ்தான் தனது மண்ணில் நிகழும் மனித […]

Read More