இந்திய விமானப் படைக்கு புதிய பலம் – ஸ்பைஸ் 2000 குண்டுகள்

விமானத்தில் இருந்து வீசப்படும் spice 2000 ரக குண்டுகளை இந்திய விமானப்படைக்கு இஸ்ரேல் அரசு அனுப்பி வைத்துள்ளது. முதல் கட்டமாக குவாலியரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இங்கிருந்துதான் இந்த குண்டுகளைப் பயன்படுத்தக்கூடிய மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இயக்கப்படுகின்றன.மிராஜ் ரக விமானங்கள்தான் பாகிஸ்தானின் பாலகோட்டில் எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து ஸ்பைஸ் 2000 ரக குண்டுகளை வீசித் தகர்த்தது.
பாலகோட் தாக்குதலில் 12 குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த குண்டுகளால் ஒரு கட்டடத்தையே முற்றிலும் தரைமட்டமாக்க முடியும். 100க்கும் மேற்பட்ட குண்டுகளை வாங்குவதற்காக இஸ்ரேலுடன் 250 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Polimer

Leave a Reply

Your email address will not be published.