19 வயதில் உட்சபட்ச தியாகம்-இரண்டாவது நாளே வீரமரணம்: மனதை உருக்கும் சம்பவம்

19 வயதில் உட்சபட்ச தியாகம்-இரண்டாவது நாளே வீரமரணம்: மனதை உருக்கும் சம்பவம்

இன்று மேலும் ஒரு வீரத்திருமகன் மூவர்ணக் கொடியில் சுற்றப்பட்டு வீடு திரும்பியுள்ளாா்.இராணுவத்தில் பணியை தொடங்கி வெறும் இரண்டாவது நாளே தனது 19வது வயதில் வீரச்சாவை தழுவியுள்ளார்.

கடந்த இரு நாட்களாக பாகிஸ்தான் இரவு முழுதும் கடுமையாக ஷெல்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.குப்வாரா செக்டாரிலும் கடுமையான தாக்குதலை இந்திய இராணுவம் எதிர்கொண்டது.

அங்கு தான் தனது 14மாத பயிற்சியை முடித்து பணியில் இணைந்திருந்தார் ரைபிள்மேன் கமலேஷ் குமார்.இரண்டாவது நாளே நாட்டுக்காக உட்சபட்ச தியாகத்தை செய்துள்ளார.

இவர் பீகார் மாநில தலைநகர் பாட்நாவை சேர்ந்தவர்.

ராணுவத்தில் இணைந்து பயிற்சி முடித்துவிட்டு பணியில் இணைந்த இரண்டாவது நாளிலேயே வீரமரணமடைந்திருக்கிறார்.

சிப்பாய் கம்லேஷ் தனது வாழ்க்கையை வாழ தொடங்கும் முன்னரே இந்த பாரதத்தின் பாதுகாப்புக்காக வீரமரணமடைந்திருக்கிறார் என்பது மனவருத்தம் அளிக்கிறது.

பாரத் மாதா கி ஜே கோசத்துடன் கண்ணீர் வழிய அவரது இறுதி பயணம் அவரது சொந்த ஊரில் நடைபெற்றது.

#ஜெய்ஹிந்த்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Leave a Reply

Your email address will not be published.