13,500 டன்கள் எடையுடன் வருகிறது இந்தியாவின் S-5 நியூக்ளியர் நீர்மூழ்கிகள்
இந்தியாவினுடைய அடுத்த நீர்மூழ்கி ரகங்களான எஸ் 5 நீர்மூழ்கிகள் 13,500 டன்கள் எடையுடன் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த ரக நீர்மூழ்கிகள் 12 நியூக்ளியர் பலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டிருக்கும்.
இந்தியா இதுபோன்ற நான்கு நீரமூழ்கிகளை கட்ட திட்டமிட்டுள்ளது.இது இந்தியாவின் இரண்டாவது தாக்கும் சக்தியை வலுப்படுத்தும்..அதாவது இரண்டாம் நியூக்ளியர் ஸ்டிரைக்.எந்த நாடாவது இந்தியாவை அணுஆயுதம் கொண்டு தாக்கி அழித்தால் இந்த நீர்மூழ்கிகள் நமது கடற்புறத்திலோ அல்லது உலகின்எங்காவது ஒரு மூலையிலோ அந்த எதிரி நாடை கண்டிப்பான முறையில் தாக்கி அழிக்கும்.
தற்போது இந்தியா இரு நியூக்ளியர் நீர்மூழ்கிகளை இயக்கி வருகிறது. இரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்த சக்ரா மற்றும் அதையொட்டி இந்தியா சொந்தமாக தயாரித்த அரிகந்த்.அரிகந்த் தனது முதல் ரோந்து பணியை 2018ல் வெற்றிகரமாக முடித்தது குறிப்பிடத்தக்கது.