ஐஎன்எஸ் குக்ரியின் சிலிர்ப்பூட்டும் கதை

ஐஎன்எஸ் குக்ரியின் சிலிர்ப்பூட்டும் கதை

இது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குக்ரி மற்றும் அதன் கேப்டன் மகேந்திர நாத் முல்லா அவர்கள் பற்றிய சிலிர்ப்பூட்டும் கதை

டிசம்பர் 9, 1971 அன்று பாகிஸ்தான் நீர்மூழ்கி பிஎன்எஸ் ஹங்கோர் இந்திய கடற்படையின் குக்ரி போர்க்கப்பல் மீது இரு டோர்பிடோக்களை ஏவியது.இரு டோர்பிடோக்களும் குக்ரியை தாக்க , கப்பலை இனி காப்பாற்ற முடியாது என கேப்டனுக்கு புரிந்தது.அவர் தனது வீரர்களுக்கு கப்பலை கைவிட உத்தரவிட ஆறு அதிகாரிகள் மற்றும் 61 வீரர்கள் உயிர்பிழைக்க 18 அதிகாரிகள் மற்றும் 178 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

கமோடோர் எஸ்என் சிங் இந்த துர் சம்பவத்தை நினைவு கூர்கிறார் ” டிசம்பர் 9 ,இரவு  8.45மணி.பாகிஸ்தானின் பிஎன்எஸ் ஹங்கோர் தாக்கியதில்  கப்பல் வெடித்தது”.

இதில் வருந்தி நாம் உறையக்கூடிய செய்தி என்னவென்றால் உயிர் பிழைத்தவர்கள் தங்கள் கேப்டனை கடைசியாக பார்த்த நிகழ்வு தான்.45வயதே ஆன கேப்டன் முல்லா தனது சிகரெட்டை புகைத்த படியே மூழ்கி கொண்டிருந்த கப்பலுடனயே தன் இறுதி மூச்சை சுவாசித்தார்.கப்பல் கடலோடிகள் வரலாற்றை போலவே தானும் தன் கப்பலுடன் உயிர்துறந்தார்.

11 டிசம்பர் 1971ல் ” தனது சகவீரர்களை காப்பாற்றி கப்பலுடன் நீருக்குள் சென்றார் கேப்டன்” என டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

“இந்த இதை எடுத்துக்கோ,உன் உயிரை காப்பாற்றி கொள் என் உயிரைப் பற்றி கவலை கொள்ளாதே” என தன் கப்பலில் இருந்த கடைசி உயிர்காக்கும் உடையை தனது இளம் வீரருக்கு அறித்த போது கேப்டன் முல்லா கூறிய வார்த்தைகள்.இதை தனது புத்தகமான ‘The Sinking of INS Khukri: Survivors’ Stories,’ என்பதில் மேஜர் ஜெனரல்  இயன் கார்டோசோ கூறுகிறார்.

கப்பல் மூழ்கும் போது ஏற்பட்ட சுழிலில் சிக்கி பல வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

குக்ரி மூழ்கிய பிறகு அதன் கேப்டன் மற்றும் அதிகாரிகள் மீது பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.அவர்கள் தயாராக இருந்திருக்கவில்லை என்பது பிரபலமான குற்றச்சாட்டு.உண்மையில் அவர்கள் தயாராக இருந்திருக்கவில்லையா? இல்லை என மறுக்கிறார் கமாேடோர் எஸ்என் சிங்.

“நாங்கள் எதற்கும் தயாராகவே இருந்தோம்.நாங்கள் சோர்ந்து போய்விடவில்லை.அதிகபட்ச கவனத்துடன் போருக்கு தயாராகவே இருந்தோம்.வெறும் 2 நாட்கள் ஓய்வுடன் 7ம் தேதி மாலை பம்பாய் துறைமுகத்தை விட்டு கிளம்பிவிட்டோம். ‘action stations relaxed,’ ஆக இருந்த போது தான் எங்களை டோர்பிடோக்கள்  தாக்கின என அவர் நினைவு கூர்கிறார்.

மேஜர் கார்டோஸா உட்பட சில கடற்படை வல்லுநர்கள் , ஐஎன்எஸ் குக்ரி மணிக்கு 12 நாட் வேகத்தில் சென்றதால் தான் தாக்குதலுக்கு உள்ளானது என சந்தேகம் கூறுகின்றனர்.அதே நேரத்தில் ஐஎன்எஸ் கிர்பன் மணிக்கு 14 நாட் வேகத்தில் zigzag எனப்படும் வளைவுநெளிவு நிலையில் சென்றதால் அடிபடவில்லை என தெரிவிக்கின்றனர்.இது போல zigzag நிலையில் செல்வதால் டோர்பிடோ தாக்குதலில் இருந்து தப்பலாம் என கூறுகின்றனர்.

மேலும் கூறுகையில் , “கப்பலில் இருந்த எலக்ட்ரிகல் ஆபிசர் லெப்டினன்ட் விகே ஜெய்ன் கப்பலில் இருந்த சோனாரின் திறனை அதிகரிப்பது குறித்து ஆராய்ந்துகொண்டிருந்தார்.கேப்டன் முல்லா அவர்கள் இதனால் கப்பல் மெதுவாக செல்வதை விரும்பவில்லை என்றாலும் அந்த இளம் லெப்டினன்ட் வேண்டுகோளின் படி கப்பல் மெதுவாய் செல்வதை ஏற்கவேண்டியதாயினற்று” என கூறுகிறார்.

ஆனால் பாகிஸ்தான் உபயோகித்த பிரான்ஸ் நாட்டினுடைய டாப்னே வகை நீர்மூழ்கியின் சோனார் திறன் 25,000 யார்டு ஆகும்.எனவே இரு போர்க்கப்பல்களும் நீர்மூழ்கியை எதிர்த்து நின்றிருக்க முடியாது.அதனால் தான் லெப்டினன்ட் ஜெயின் குக்ரியின் சோனாரின் கண்டிபிடிக்கும் திறனை மேம்படுத்த எண்ணியிருந்திருக்கிறார்.அவருக்கு கடலில் சோதனை செய்ய நேரமிருக்கவில்லை.குக்ரியின் சோனார் கண்டுபிடிக்கும் திறன் வெறும் 1500 யார்டுகள் தான்.பாக் நீர்மூழ்கி நீருக்கடியில் மிக அமைதியாய் செல்லகூடியதாய் இருந்துள்ளது.30 நாட்டிகல் மைல் தொலைவில் வரும் போர்க்கப்பலின் என்ஜின் சத்தத்தை அதால் கேட்க முடியும்.எனவே குக்ரியின் சோனார் திறனை அதிகப்படுத்த வேண்டியிருந்தது.லெப் ஜெயின் அவர்கள் கப்பலை மெதுவாக இயக்க செய்து முயற்சித்துள்ளார் என முன்னான் கமாண்டர் ஆலன் ரோட்ரிஹியுஸ் கூறுகிறார்.அவர் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை வல்லுநர் மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கரி உள்ளிட்டு மூன்று கப்பல்களுக்கு தலைமை தாங்கியவர்.

குக்ரி தாக்கப்பட்டவுடன் கிர்பன் கமாண்டர் உத்தரவின் படி 14மணி நேரத்திற்கு பிறகே குக்ரியில் இருந்த வீரர்களை காப்பாற்ற கிர்பன் சென்றுள்ளது என ஆலன் கூறுகிறார்.” கிர்பன் கமாண்டர் பின்தங்கி நிலைபெற நினைத்துள்ளார்.அவரால் நீர்மூழ்கியை கண்டுபிடிக்க முடியாத வரை அவரால் சண்டையிட முடியாது.அவரால் இருளில் சண்டையிட முடிந்திருக்கும்- ஆனால் பாக் நீர்மூழ்கி இந்திய போர்கப்பல்கள் வருவதை இந்திய கப்பல்கள் நீர்மூழ்கி இருப்பை உணருவதற்கு முன்பே கணித்திருக்கும்.இது விவேகமான முடிவு தான்.பின்தங்கி இருந்து மற்ற படைகளை வரவழைத்து தேடுதல் மற்றும் மீட்பு பணி மேற்கொண்டது.அவ்வாறு செய்யாமல் அது உடனேயே குக்ரி மூழ்கடிக்கப்பட்ட இடத்திற்கு சென்றிருக்குமேயானால் கிர்பனும் மூழ்கடிக்கப்பட்டு பல உயிர்கள் மரணித்திருக்கும்” என கூறுகிறார்.

மேற்கு கட்டளையகம் குக்ரிக்கு தகுந்த ஆதரவு வழங்கியதா?

1960களிலேயே நீர்மூழ்களை பாகிஸ்தான் வாங்கி அதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்ததாக கடற்படை வல்லுநர்கள் கூறுகின்றனர்.ஆனால் இந்தியா 1968ல் சோவியத்திடம் இருந்து வாங்கி 1970ல் தான் நீர்மூழ்கிகளை இயக்க ஆரம்பித்திருந்தது.இது போருக்கு வெறும் ஒரு வருட முன்னர் தான் நடைபெற்றுள்ளது.குக்ரி போன்ற பிரைகேட் கப்பல்கள் பிரான்ஸ் நீர்மூழ்கிகளுக்கு எதிராக 1971ல் போருக்கு செல்வதற்கு முன்னர் மிக குறைந்த அளவு அனுபவம் பெற்றிருந்தது.

1500 முதல் 2500 யார்டுகள் வரையே போர்க்கப்பலால் கண்காணிக்க முடியும் எனும் போது தான் நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்திகளின் தேவை மறுக்கமுடியாததாகிறது.பொதுவாக கப்பலின் கண்காணிக்கும் தொலைவு வெப்பம் ,அழுத்தம் மற்றும் ஆழ்கடலின் உப்புத்தன்னை போன்றவற்றால் பாதிக்கப்படுகிறது.எனவே இவற்றை சரிசெய்து கப்பலை பாதுகாக்க நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்திகள் தேவைப்படுகிறது.இவை கப்பல் செல்வதற்கு முன்னாலேயே குறிப்பிட்ட தூரம் சென்று சோனாரை நீருக்குள் இறக்கி நீர்மூழ்கிகளை கண்காணிக்கிறது.அவ்வாறு செய்யும் பட்சத்தின் கப்பல் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் “குக்ரி மற்றும் கிர்பனுக்கு தாக்குல் நடந்த சமயத்தில் நீர்மூழ்கி எதிர்ப்பு சம்பந்தமான உதவிகள் அப்போது கிடைக்கவில்லை.அந்த மாலைப் பொழுதில் இரு சீகிங் வானூர்திகள் சோனாரை கொண்டு தேடினர்.இதனால் பிஎன்எஸ் ஹங்கோர் முடங்கிபோயிருந்தது.ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் சீகிங் வானூர்தி தளம் திரும்பின.சீகிங் இல்லாததை உணர்ந்த பிஎன்எஸ் ஹங்கோர் தைரியமாக வந்து தாக்கிவிட்டது “கடற்சார் வரலாற்றாலர் ரபீன்நிர ஹசாரி கூறுகிறார்.

 “19:15ல்  பிஎன்எஸ் ஹங்கோர் களத்தில் இறங்கியது.15 நிமிடத்திற்கு பிறகு பெரிஸ்கோப் ஆழத்திற்கு வந்து இந்திய கப்பல் நடமாட்டத்தை கண்காணித்த போது இருளில் எதையும் பார்க்கமுடியவில்லை, அதன் பெரிஸ்கோப் ரேடார் வெறும் 9,800மீ தான்.கப்பல் முழுதும் இருளில் மூழ்கியது.நீர்மூழ்கியின் கமாண்டிங் ஆபிசர் அகமது டன்சிம் நீர்மூழ்கியை 55மீ ஆழத்திற்கு செல்ல முடிவெடுத்து சோனார் வழியாக அணுக , கடைசி தாக்குதலுக்கு தயாரானார்.எதிரி நீர்மூழ்கியின் இருப்பை அறியாமல் குக்ரி தனது பாதலையிலேயே வந்துள்ளது.ஹங்கோர் முதல் டோர்பிடோவை ஏவ அது வெடித்த சத்தம் கேட்கவில்லை.மீண்டும் அடுத்த டோர்படோ ஏவப்பட்டது.ஐந்து நிமிடத்திற்கு பிறகு வெடிச்சத்தம் கேட்க,குக்ரி தாக்கப்பட்டது உறுதியானது” என முன்னாள் வைஸ் அட்மிரல் கூறுகிறார்.

குக்ரியின் கேப்டன் முல்லா எந்தமாதியான மனிதர்?

கேப்டன் முல்லாவின் மகள் அமீதா முல்லா கார்டோசோவின் புத்தகத்தில் அளித்த பதில் !

“எந்த ஒன்று எனது அப்பா கப்பலோடு நீருக்குள் மூழ்க அவருக்கு கூறியது என்பதை நினைத்து வியக்கிறேன்.வீரத்திருமகன் என வரலாறு அவரை பேச விருப்பினாரா? அல்லது தொனைமைகாலமாக கேப்டன் கப்பலோடு மூழ்க வேண்டும் என நினைத்து மூழ்கினாரா ? அல்லது அவர் அவரது கப்பலோடு கடலின் கருப்பையில் உறங்க நினைத்தாரா, அது தான் சரி என நினைத்தாரா?”  என கூறுகிறார்.

” வீரம், கடினத்தை தாங்கும் மனநிலை , இரும்புத் தனமான நம்பிக்கை கொண்ட நல்ல மனிதர்” என அவரை அவரது சக அதிகாரிகள் வர்ணிக்கின்றனர்.காமோடோர் சிங் கப்பல் தாக்கப்பட்டு மூழ்கும் நேரத்தில் அமைதியாக நின்றிருந்த கேப்டனை நினைவு கூர்கிறார்.” அவர் தவறிழைக்காத எங்கள் கேப்டன்.அவரால் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என கூறுகிறார்.

Captain Mulla’s legacy:

கேப்டன் தான் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னாள் வரை தான் ஒருவர் மட்டும் இறக்கவில்லை என்பதை அறிவார்.அவருடன் பல வீரர்களும் மூழ்கிகொண்டிருந்தனர்.தன்னுடைய வீரர்கள் கப்பலுக்குள் மாட்டிக்கொண்டிருப்பதை அவர் அறிந்திருந்தார்.என்ஜின் அறையில் கடைசி நேரத்தில் கமாண்டர் மற்றும் என்ஜினியர்கள் தங்கள் நிலைக்கு அவசரமாக திரும்பியதை அவர் கடைசியாக பார்த்தார்.லெப் ஜெயின் மேம்படுத்தப்பட்ட சோனார் குறித்து சார்ட்டில் விளக்க சிவப்பு மற்றும் ஊதா பென்சில்கள் எடுக்க கீழே சென்றபோது கடைசியாக பார்த்தார்.லெப் கமாண்டர் மற்றும் சிறப்பு தகவல் பரிமாற்றம் அதிகாரி ஜேகே சூரி வீரர்களுக்காக அதிக உயிர்காக்கும் உடைகளை எடுக்க கீழ் தளம் சென்ற போது கடைசியாக பார்த்தார்.

“நீங்கள் ஆக்சன் நிலையை தயார் செய்தால் ( கப்பலை போருக்கு தயார் செய்தல்)  கப்பல் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கும்.கப்பலில் உள்ள அனைத்து வீரர்களும் தங்கள் நிலையில் தயாராக இருப்பர்.கப்பல் மாலுமிகள் மற்றும் தொழில்நுட்ப வீரர்கள் கப்பலின் கடைசி தளத்தில் தண்ணீர் லைனுக்கம் கீழ் வேலை செய்வர்.அங்கு தான் என்ஜீனும் மற்ற இயந்திரங்களும் இருக்கும்.டர்பிடோக்கள் கப்பலை தாக்கினால் அது தண்ணீர் லைனுக்கும் கீழே கீழ்தளத்தை தான் தாக்கும்.இந்த சமயத்தில் கீழ் லைனில் வேலை பார்க்கும் வீரர்கள் பிழைப்பது கடினம்.ஆனால் இதைப் பற்றி எந்த கவலையும் வீரர்கள் பணிபுரிகின்றனர்.இதை அவர்கள் யாருடனும் பகிர்வதில்லை.அதற்கு ஒரே காரணம் கேப்டன் மீது அவர்கள் வைக்கும் நம்பிக்கை தான்.கேப்டன்கள் தங்கள் மாலுமிகளை எந்த நிலையிலும் கைவிட கூடாது என்று பயிற்சி பெறுகின்றனர்.

கமோடோர் சிங் அவர்கள் கேப்டன் முல்லாவை கடைசி முறையாக பார்த்ததை நினைவு கூர்கிறார்.கப்பலின் மேல்தள பிரிட்ஜில் அவர் நின்று பணி செய்துகொண்டிருந்தார் என கூறுகிறார்.

9 டிசம்பர் அன்று அவரது கப்பல் தாக்கப்பட்ட போது அவர் தனது வீரர்களையும் அதிகாரிகளையும் போல உயிர்தப்பிக்க லைப் போட்டுகளில் ஏற முயற்சிக்கவில்லை.அவர் அவரது பணியை முடித்தார்.கப்பலுடன் அவர் கடற்தரைக்கு செல்ல முடிவெடுத்தார்.தொன்றுதொட்டு இவ்வாறு கப்பலோடு பல கேப்டன்கள் நீருக்குள் செல்வது போல அவர் தன்னையும் அந்த முக்கியத்துவம் அல்லாத சடங்கில் ஈடுபடுத்தி தான் பழமையான மரபுகளை பின்பற்றுகிறேன் என முடிவெடுத்திருக்கலாம்.அவர் செய்த விசயம் சரியானது இல்லை அல்லது நாம் இதை அவரிடம் எதிர்பார்க்கவும் இல்லை.எனினும் அவர் அந்த அரபிக் கடலின் பரந்த தளம் போல  நம் இந்தியர்கள் அனைவரும் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

அவரது தியாகம் மற்றும் சேவை காரணமாக அவருக்கு இரண்டாவது மிக உயரிய விருதான மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.