Breaking News

பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் ஏவுகணை ஏவி சோதனை

பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் ஏவுகணை ஏவி சோதனை 

 பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில், ஏவுகணை ஏவி சோதனை செய்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக கடுமையான சொற்களை பயன்படுத்தும் பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள், அந்நாட்டுக்கு எதிராக போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம் என கூறி வருகின்றனர். இதனால், இரு நாட்டு உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் பாகிஸ்தான் ராணுவம், நள்ளிரவில் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது. கஸ்னாவி எனப்படும் இந்த ஏவுகணை ஒரு குறை தூர பலிஸ்டிக் ரக ஏவுகணை ஆகும். இந்த  சோதனை  வெற்றிகரமாக நடைபெற்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. கஸ்னாவி  ஏவுகணை 290 கி.மீட்டர் வரை சென்று  தாக்கும் திறன் பெற்றது என்று பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.

ராணுவத்தின் இந்த சோதனைக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி மற்றும் பிரதமர் இம்ரான்கான் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.  பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தொடர்பான வீடியோக்களை அந்நாட்டு தகவல் தொடர்பு அதிகாரி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இடது புறம் உள்ளது பாக்கின் கஸ்னாவி ஏவுகணை..வலது புறம்  உள்ளது சீன ஏவுகணை..எப்படி பெயிண்டு நல்லா அடிச்சிருகானுங்களா மக்கா

Leave a Reply

Your email address will not be published.