இந்தியா-இரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டம்

இந்தியா-இரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டம்

இந்தியா-இரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய உள்ளன.தவிர 800கிமீ வரை செல்லக்கூடிய மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையும் மேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதிக்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் மூன்றாம் நாடுகளுடன் ஒப்பநம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைய நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணை பெற முயன்று வருகின்றன.இதற்காக இந்திய இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகங்களிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகிறது.அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் கையெளுத்தாகும்.இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் ஏற்றுமதி செய்யப்பட உள்ள நாடுகள் இந்தியா இரஷ்யா இரண்டிற்குமே நட்பு நாடுகளாக இருக்கும்.

இந்திய இரஷ்ய கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஒரு சூப்பர் சோனிக் வகை ஏவுகணை ஆகும்.இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் இரஷ்யாவின் மாஸ்கோ நதிகள் நினைவாக பிரம்மோஸ் என பெயர்சூட்டப்பட்டுள்ளது.

இந்திய இரஷ்யா இணைந்தே இந்த ஏவுகணை தயாரித்து வருகின்றன.

இது தவிர பிரம்மோஸ் ஏவுகணையின் செயல்படும் தூரத்தை 800கிமீ ஆக மேம்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உள்ள பிரம்மோஸ் ஏவுகணை 290கிமீ வரை செல்லும்.400கிமி வரையில் செல்லும் பிரம்மோஸ் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.