பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை பெறும் முதல் நாடு தாய்லாந்து ?
பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை பெறும் முயற்சியாக தாய்லாந்து அரசு இந்தியாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சில நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணையை இறக்குமதி செய்ய சாதாகமாக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது.இந்த வருடத்தில் நடக்காது எனினும் அடுத்த வருடத்தில் நடந்து முடியலாம் என தகவல்கள் வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் தாய் நாட்டு கடற்படை தளபதி இந்தியா வந்திருந்த போது பிரம்மோஸ் குறித்த ஆர்வத்தை இந்தியாவிடம் தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ கூட்டுறவு வளர்ந்து வரும் வேளையில் தனது டோர்னியர் விமானங்களை பழுது நீக்கி புதுப்பித்து தர வேண்டியது.இதற்கென கடந்த ஜீனில் கடற்படை,ஹால் மற்றும் பெல் நிறுவன கூட்டுக்குழு தாய்லாந்து சென்று பேசியது.
மேலும் தாய்லாந்து தனது கடற்படையில் மேலதிக கப்பல் இணைத்து வலிமையை பெருக்க முனைந்து வருகிறது.இதில் இந்தியா தங்களால் முடிந்த உதவிகள் குறித்து ஆராய்ந்து வருகிறது.அதாவது வடிவமைப்பு மற்றும் உள்நாட்டு பொது கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து கப்பல் தயாரிப்பது போன்றவை.