ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதனால், அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அங்கு சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பிற்கு பின்பு முதன் முறையாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இன்று காஷ்மீர் சென்றார். இதனையடுத்து வடக்கு பிராந்திய பகுதிகளை பார்வையிட்டார்.
அப்போது பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி அருகே இந்திய எல்லையில் இருந்த ராணுவ நிலைகளை பார்வையிட்டார். மேலும் எல்லை பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகளையும் பிபின் ராவத் சந்தித்து ஆலோசனை நடத்தியாக கூறப்படுகிறது.