காஷ்மீர் மக்களுக்கு உதவ ராணுவம் தயாராக உள்ளது – பாகிஸ்தான் ராணுவத் தளபதி

 

காஷ்மீர் மக்களுக்கு உதவ ராணுவம் தயாராக இருக்கிறது என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவித் பஜ்வா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 3ஏ நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார். மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் காஷ்மீர் மக்களுக்கு எந்த அளவுக்கும் உதவ ராணுவம் தயாராக இருக்கிறது என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவித் பஜ்வா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தரப்பில கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் 370 பிரிவை நீக்கியது சட்டவிரோதம், ஒரு தலைப்பட்சமான முடிவு என்று கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் செயல்பாட்டை சட்டவிரோதம் என்றும், அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை இது மேலும் மோசமாக்கும் எனத் தெரிவி்த்துள்ளார்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவத் தலைமை அலுவலகத்தில் கார்ப்ஸ் கமாண்டர் கூட்டம் நடந்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பஜ்வா பங்கேற்றார். அப்போது அவர் கமாண்டர்கள் மத்தியில் பேசுகையில்,

  • “காஷ்மீர் மக்களுக்கு வழங்கிய அரசமைப்புச்சட்ட சலுகைகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த நேரத்தில் காஷ்மீர் மக்களுக்கு நாம் கடைசிவரை துணை நிற்கவேண்டும். அவர்களுக்கு எந்த அளவுக்கும் உதவ ராணுவம் தயாராக இருக்க வேண்டும். இந்தியாவின் முடிவுகளையும், செயல்பாட்டையும் பாகிஸ்தான் அரசு கண்டித்துள்ளதை வரவேற்கிறோம் ” எனத் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.