காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கான மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்திய அரசின் நகர்வுக்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச பிரச்சினையில் (காஷ்மீர்) பாகிஸ்தானும் ஒரு தரப்பாகும், இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க தேவையான நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்ளும். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.