இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறப்பதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு முற்றிலும் தடை விதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 5ம் தேதி ரத்து செய்தது.

இந்நிலையில் ஐநா சபையில் காஷ்மீர் பிரச்னையை முன்னெடுக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் சீனா மட்டுமே ஆதரவளித்த நிலையில் தோல்வியடைந்தன. இதையடுத்து இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையைப் பயன்படுத்துவதில் தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அறிவியில் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாத் ஹூசைன் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.